பொதுவாக காகத்திற்கு சாதம் வைத்தவுடன் கா கா என்று நாம் அவற்றைக் கத்திக் கூப்பிட்டால், தங்கள் கூட்டத்துடன் வந்து சாப்பிட ஆரம்பிக்கும்.
சில சமயம் முன்னோர்கள் என்று சொல்லப்படுகின்ற தினசரி வீட்டில் வந்து உணவுக்காக காத்திருக்கும் காகம் வந்து சாப்பிடும். ஆனால் இதுவே சில சமயங்களில் சாப்பாடு வைத்துவிட்டு எவ்வளவு தான் சத்தமாகக் கத்திக் கூப்பிட்டாலும் காகம் வருவதில்லை. அதுவே சில சமயங்களில் வருகின்ற காகம் வழக்கம் போல சாப்பாட்டை சாப்பிடாமல் நிற்கும். அல்லது திரும்பிப் போகும். அப்படி நீங்கள் உங்களுடைய பித்ருக்களாக நினைக்கும் காகம் நீங்கள் வைக்கும் உணவை சாப்பிடாமல் இருந்தால் அதற்கு என்ன தான் அர்த்தம்?