நெல்லிக்குப்பம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு ரிசர்வ் வங்கி கணினி. மேசைகள் வழங்கியது.
கடலூர்


 


கடலூர் மாவட்டம். நெல்லிக்குப்பம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு ரிசர்வ் வங்கி  கணினி. மேசைகள் வழங்கியது.


கடலூர் மாவட்டம் .நெல்லிக்குப்பம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இந்திய ரிசர்வ் வங்கி சென்னை சார்பில் நிதியியல் கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நெல்லிக்குப்பம் இந்தியன் வங்கி மேலாளர் திருமூர்த்தி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் பூங்கொடி வரவேற்புரையாற்றினார்.விழாவில் சிறப்பு விருந்தினராக ரிசர்வ் வங்கி சென்னை மேலாளர் ரவி கலந்து கொண்டு ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார் .ரிசர்வ் வங்கியின் சார்பில் இரண்டு கணினியும் .ஆறு                மேஜைகளும் பள்ளிக்கு நன்கொடை வழங்கி சிறப்புரை ஆற்றினார். கடலூர் இந்தியன் வங்கியின் நிதி சார் கல்வி மைய ஆலோசகர் சண்முகம்  வங்கியின் செயல் மருத்துவ காப்பீடு திட்டங்கள். மாணவிகளுக்கு தரக்கூடிய கல்விக்கடன் குறித்தும்  விளக்கினார். மேலும் இது குறித்து மாணவிகளிடம் கேள்விகளை கேட்டு பதிலளித்த மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் இந்துஜா  பள்ளி கல்விக்கு பின் வழங்கப்படும் வேலைவாய்ப்பு குறித்த பயிற்சியில் பற்றி ஆலோசனை வழங்கினார் முடிவில் உதவி தலைமையாசிரியர் ஜெயந்தி  நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவியர்கள் கலந்து கொண்டனர்.



Popular posts
திருவண்ணாமலை அடுத்து நல்லாம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு பாஷா முன்னால் தலைவர் நிவாரணம் பொருட்கள் வழங்கினார்.
Image
கோழி இலவசம் கொரோனா அச்சம் - வாங்க ஆர்வமில்லாத பொதுமக்கள்
Image
எல்லோரும் மாஸ்க் அணிய தேவையில்லை - மத்திய சுகாதாரத்துறை
Image
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் - டி.சிவா தலைமையில் புதிய அணி
Image
தமிழக அரசு இறக்குமதி செய்த கொரோனோ பரிசோதனைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு, அதனை மற்ற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க முனைவது தமிழர் விரோதப்போக்கின் உச்சம் மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்
Image